மூன்றாம் அலை குறித்து விளக்கம்

மூன்றாம் அலை குறித்து விளக்கம்

1 mins read
7c8a3b10-e9d2-46a0-9abc-38bd7849e8b4
-

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வரும் சூழலில், மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த மூன்றாம் அலை வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் அதற்குள் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், "அனைவருமே விழிப்புணர்வுடன் இருக்க வேண் டும். மூன்றாவது அலை அனைத்து வயதினரையும் பாதிக்கும். முதல், இரண்டாம் அலையில் குழந்தை களும் பாதிக்கப்பட்டனர். குழந்தை களுக்கு இன்னும் தடுப்பூசி போடப் படாமல் இருப்பதால் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்," என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்ற னர் எனத் தெரிவித்தார்.