மீன்பிடித் தடைக்காலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதன் எதிரொலியாக காசிமேடு துறைமுகத்தில் மீன்வாங்க மக்கள் கூட்டம் அலை
மோதியது. அத்துடன், ஊரடங்கு தளர்வு காரணமாக காலை 6 முதல் இரவு 7 மணி வரை மீன் வியாபாரம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, விதவிதமான மீன்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் மொத்த, சில்லறை வியாபாரிகள், பொது மக்கள் என ஏராளமானோர் காசிமேட்டில் குவிந்தனர். ஆனால், வழக்கத் தைவிட அதிக விலைக்கு மீன்கள் விற்பனை நடந்தது. மீனவர்களின் வலையில் அதிக மீன்கள் சிக்காததால் அதிக விலைக்கு மீன்கள் விற்பனை ஆனதாகக் கூறப்பட்டது.
படம்: இபிஏ

