ேமாப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

ேமாப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

1 mins read
359cd9f5-29df-4bf1-9fbb-3821560f2512
-
Google News Preferred Icon

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை நடந்துள்ள பெரும்பாலான ெகாலை, ெகாள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கொடுப்பதில் உறுதுணையாக இருந்து வந்த துப்பறியும் நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.

அதற்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் அடக்கம் நடத்தப்பட்டுள்ளது.

வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த ராஜராஜன் என்ற மோப்ப நாயின் உடல் துப்பறிவுப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப் பட்டது. அதற்கு காவல்துறை யினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க காவல் துறையினரின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.