'சசிகலாவுடன் பேசியதால் எனது காரை எரித்துள்ளனர்'

'சசிகலாவுடன் பேசியதால் எனது காரை எரித்துள்ளனர்'

1 mins read
42be2fe7-326c-4d67-b0c2-0070e20abaee
-

ராமநாதபுரம்: சசிகலாவுடன் கைபேசியில் பேசியதால் என்னை ஏற்ெகனவே அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கிவிட்டது. இப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது காரை எரித்து சாம்பலாக்கி விட்டனர் என்று வின்சென்ட் ராஜா என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர் தங்கியிருந்த தார் தொழிற்சாலையில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலிசார் ஆய்வு செய்தபோது, இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து ஆலைக்குள் வந்ததும் பின்னர் வின்சென்ட் ராஜாவின் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததும் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலிசார் குற்ற வாளிகளைத் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜா, 43, அதிமுகவில் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இவர் சசிகலாவுடன் கைபேசி யில் பேசிய 'ஆடியோ' ஒலிப்பதிவு வெளியானதைத் தொடர்ந்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பரமக்குடி அருகே உள்ள மேலக்காவனூரில் உள்ள தனது தார் தயாரிக்கும் தொழிற் சாலையில் அவர் தங்கியிருந்த போது, அதிகாலை நேரத்தில் வின்சென்ட் ராஜாவின் கார் எரிந்து ெகாண்டிருந்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.