உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
627416b2-f1db-4996-8696-1c5bf566f3da
-

புது­டெல்லி: தமி­ழ­கத்­தில் உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­ப­டாத ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் இனி­யும் காலம் தாழ்த்­தா­மல் செப்­டம்­பர் 15ஆம் தேதிக்­குள் தேர்­தலை நடத்தி முடிக்­கு­மாறு உச்­ச­ நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் விடு­பட்ட ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்த உத்­த­ர­வி­டக் கோரி தொட­ரப்­பட்ட வழக்கை உச்­ச­நீ­தி­மன்­றம் நேற்று விசா­ரித்­தது. அப்­போது, உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு தேர்­தலை நடத்த ஆறு மாத கால அவ­கா­சம் கேட்­டுள்­ளது தமி­ழக அரசு.

ஆனால், இதற்கு அனுமதி மறுத்­து­விட்ட உச்ச நீதி­மன்­றம், "உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­படா­மல் உள்ள விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி, செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர், நெல்லை, தென்­காசி, வேலூர் ஆகிய ஒன்­பது மாவட்­டங்களுக்­கான உள்­ளாட்­சித் தேர்­த­லை­யும் நகர்ப்­புற உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்­கான தேர்­த­லை­யும் செப்­டம்­பர் 15க்குள் நடத்தி முடிக்க வேண்­டும். கொரோனா பெருந்­தொற்­றி­னைக் கார­ணம் காட்டி தேர்­தலை நடத்­தா­மல் இருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல," என்று கூறினர்.

வாக்­குப்­பதிவு, வாக்கு எண்­ணிக்கை உள்­ளிட்ட அனைத்துப் பணி­க­ளை­யும் செப்­டம்­பர் 15ஆம் தேதிக்­குள் முடிக்­க­வேண்­டும் என்­றும் நீதி­பதி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

உள்­ளாட்சித் தேர்தலை நடத்த நிறைய கால அவ­கா­சம் வழங்­கப்­பட்டுவிட்­டது, இனியும் மூன்று மாதம் அவ­கா­சம் உள்ளதால், இதற்குப் பிறகும் கால அவ­கா­சம் வழங்­க­மு­டி­யாது என்­றும் நீதி­பதி­கள் தங்­கள் தீர்ப்­பில் கூறி­னர்.

இதற்­கி­டையே, தமி­ழக சட்ட சபை­யின் 16வது சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் உரை­யாற்­றிய ஆளு­நர் பன்­வாரிலால் புரோ­ஹித், கொரோனா பெருந்­தொற்­றின் தீவி­ரம் குறைந்­த­தும் நகர்ப்­புற, ஊர­கப் பகு­தி­க­ளுக்­கான உள்­ளாட்சித் தேர்­தலை விரைவில் நடத்­த நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.