கே.எஸ். அழகிரி: திமுகவின் தீர்மானத்தை ஏற்கமாட்டோம்

கே.எஸ். அழகிரி: திமுகவின் தீர்மானத்தை ஏற்கமாட்டோம்

1 mins read
5542333b-a544-45f6-ba63-b5827d75e7b9
கே.எஸ்.அழகிரி. படம்: ஊடகம் -

சேலம்: மறைந்த முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்­பில், சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் எழு­வரை விடு­தலை செய்­வது தொடர்­பாக சட்­ட­மன்­றத்­தில் திமுக தீர்­மா­னம் கொண்டு வந்­தால் அதை நாங்­கள் ஏற்­க­மாட்­டோம் என்று தமி­ழக காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் கே.எஸ். அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

"குற்­ற­வா­ளி­க­ளைக் குற்­ற­வாளி களா­கத்தான் கரு­த­வேண்­டுமே தவிர, அவர்­க­ளைப் பரி­தா­பப்­பட்டு விடு­விக்க நினைப்­பது மக்­கள் மத்­தி­யில் ஒரு தவ­றான முன்­னு­தா­ர­ணத்தை ஏற்­ப­டுத்திவிடும்," என்­று அவர் மேலும் கூறினார்.

கே.எஸ்.அழ­கி­ரி­யின் இந்­தக் கருத்து பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், திமுகவுடன் கூட்­டணி வைத்து தேர்­த­லில் வெற்றி­பெற்ற பிறகு கட்­சிக்­குள் விரி­சல் ஏற்­படும் வித­மாக அவர் பேசி­யுள்­ளதாக அர­சி­யல் வட்­டா­ரத்­தினர் கூறியுள்ளனர்.

ஏறக்குறைய 29 ஆண்­டு­க­ளாக பேரறிவாளன், நளினி, முரு­கன் உள்­ளிட்ட ஏழு பேர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­ற­னர்.

வாழ்க்­கை­யில் பெரும்­பா­லான காலத்தை சிறை­யி­லேயே கழித்து விட்ட ஏழு பேரை­யும் விடு­விக்க வேண்­டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

கடந்த அதி­முக ஆட்­சி­யின் போது தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு அதி­ப­ரி­டம் இந்த மனு அனுப்பி வைக்­கப்­பட்­டது. ஆனால், அதி­பர் அது தொடர்­பாக எந்த முடி­வை­யும் எடுக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், திமுக எடுக்கும் தீர்மானத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரி­வித்து உள்ளனர்.