சென்னையில் உள்நாட்டு விமானச் சேவை அதிகரிப்பு

சென்னையில் உள்நாட்டு விமானச் சேவை அதிகரிப்பு

1 mins read
60813c5b-cfbe-4517-9239-621b94012e62
டெல்லி, ஹைதராபாத், மும்பை, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமான உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கின. படம்: ஊடகம் -

சென்னை: தளர்­வற்ற முழு ஊர­டங்கு, தடுப்­பூசி போடும் பணி யைத் துரி­தப்­ப­டுத்தி வரு­வது போன்ற நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை­யின் தீவி­ரம் சற்று ஓய்ந்து வரு­கிறது.

இதன் கார­ண­மாக, தலை­ந­கர் சென்­னை­யில் இருந்து வெளி மாநி­லங்­கள், நக­ரங்­க­ளுக்­குச் செல்­லும் விமா­னச் சேவை­களும் வெளி­மா­நி­லங்­களில் இருந்து சென்­னை திரும்­பும் விமா­னச் சேவை­களும் அதி­க­ரித்­துள்­ளன.

அதே­போல், பய­ணி­களின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ள­தாகத் தக­வல்­கள் கூறின.

"நேற்று முன்­தி­னம் ஒரே­நாளில் அதிக அளவில் 127 உள்­நாட்டு விமா­னச் சேவை­கள் இயக்­கப்­பட்டன. பய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யும் 8,000க்கும் மேல் அதி­க­ரித்­தது. இதேபோல், விமா­னச் சேவைகள், பய­ணி­க­ளின் எண்­ணிக்கை நேற்­றும் அதி­கமாக இருந்தது," என விமான நிலைய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

ஏப்­ரல் மாதத்­தில் சென்னை உட்­பட மாநிலம் முழு­வ­தும் கிரு மித் தாக்­கம் அதி­க­ரித்­துக் காணப்­பட்­டது. இத­னால் விமா­னப் பய­ணி­கள் எண்­ணிக்கை சரிந்­த­து­டன் விமா­னங்­களின் இயக்­க­மும் 100க்கு கீழ் குறைந்­தது.

தமி­ழ­கத்­தில் தற்­போது கொரோனா தாக்­கம் குறைந்து வருவ­தால் டெல்லி, ஹைத­ரா­பாத், மும்பை, மதுரை, திருச்சி, கோவை, பெங்­க­ளூரு, அந்­த­மான் தீவு உள்­ளிட்ட பகு­தி­களில் இருந்து சென்­னைக்கு கூடு­தல் விமா­னங்­கள் வந்­து­ சென்­றன.

இந்த விமானச் சேவை வரும் வாரங்­களில் இன்னும் அதி­க­ரிக்­கும் என விமான நிலைய அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.