எழுத்தாளர் ராஜநாராயணன், நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல்

எழுத்தாளர் ராஜநாராயணன், நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல்

1 mins read
cb0732bc-81a0-4835-bb71-c90793e238c7
-
Google News Preferred Icon

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை தொடர்ந்தது.

சபாநாயகர் அப்பாவு, மறைந்த உறுப்பினர்கள் மறைவுக்கும் சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பைத் தந்த பிரபலங்களின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார்.

மறைந்த திரைப்பட நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்டோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகக் கூறி சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் இரு மணித் துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.