செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
2201e40b-7e8c-4c73-8ecf-08edcfdd9c9e
-

கார் மூழ்கியதில் தந்தை-மகள் பலி

கன்னியாகுமரி: சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்ததில் மூவர் நீரில் மூழ்கினர். காருக்குள் இருந்த ஒரு பெண் மட்டும் உயிர் தப்பிய நிலையில், தந்தையுடன் இருந்த ஒரு மகள் பலியானார். கன்னியாகுமரி அருமனையைச் சேர்ந்த வியாபாரி ராஜேந்திரன், 55, தனது மகள்கள் ஷாலினி, 20, ஷாமினி, 21, ஆகியோருடன் காரில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, தாணிக்கோட்டவிளை பகுதியில் சாலையோரம் உள்ள செம்மண்குளத்தில் கார் பாய்ந்தது. முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ஷாலினி மட்டும் காரின் கதவைத் திறந்துகொண்டு நீந்தி கரை சேர்ந்தார்.

7,427ஆக குறைந்த கிருமி பாதிப்பு

சென்னை: பொது முடக்கத்தின் பலனாக கடந்த மூன்று வாரங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு விகிதம் 72% குறைந்துள்ளது. அடுத்து வரும் நாள்களில் இந்தக் கிருமிப் பரவல் மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,427 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி யானது. அதேநேரத்தில், மேலும் 15,281 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 189 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 31,386 ஆக அதிகரித்துள்ளது.