சாத்தான்குளம் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அதேபோன்ற மரணம்

சாத்தான்குளம் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அதேபோன்ற மரணம்

1 mins read
a21cb28d-5b11-4b81-a1aa-d158308a35a2
-

சேலம்: சேலம் மாவட்­டம் வாழப்­பாடி அடுத்த பாப்ப­நா­யக்­கன்­பட்டி சோத­னைச்­சா­வ­டி­யில் போலிசா­ரும் வனத்­

து­றை­யி­ன­ரும் நேற்று முன்­தி­னம் மாலை வாகன தணிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது, அவ்­வ­ழி­யாக எடப்­பட்­டி­பு­தூ­ரைச் சேர்ந்த விவ­சாயி முரு­கே­சன், 45, (படம்) என்­ப­வர் தனது நண்­பர்­கள் மூவ­ரு­டன் சென்ற மோட்­டார் சைக்­கிள்­களை நிறுத்தி போலி­சார் சோதனை செய்­துள்­ள­னர்.

அப்­போது போலி­சா­ருக்­கும் முரு­கே­ச­னுக்­கும் இடையே வாக்கு­ வா­தம் ஏற்­பட்­டுள்­ளது. இதில் ஆத்­தி­ர­ம­டைந்த போலிஸ்­கா­ரர், முரு­கே­சனை லத்­தி­யால் தாக்­கி­யுள்­ளார். மயங்கி விழுந்த முரு­கே­சன், சேலம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு இர­வில் உயி­ரி­ழந்­தார்.

இவ­ருக்கு அன்­னக்­கிளி என்ற மனை­வி­யும் ஜெயப்­பி­ரியா, ஜெய பி­ருந்தா என்னும் மகள்­களும் கவிப்­ பி­ரி­யன் என்ற மக­னும் உள்­ள­னர்.

விவ­சா­யி­யான முருகேசன், இடை­ய­ பட்டி-வாழப்­பாடி சாலை­யில் மளிகை மற்­றும் பழக்­க­டை­கள் நடத்தி வந்­தார்.

முரு­கே­சனை போலி­சார் தாக்­கி­யது குறித்த காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்­வா­ளர் பெரி­ய­சாமி, காவ­லர் முரு­கன் ஆகிய இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இன்­னொரு காவ­ல­ரைத் தேடி வரு­கின்­ற­னர்.

அத்­து­டன் பெரி­ய­சாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்­யப்­பட்டு வேலை­யி­லி­ருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

'மீண்­டு­மொரு சாத்­தான்­கு­ளம் சம்­ப­வமா' என பொது­மக்­கள் கொந்­ த­ளிக்­கின்­ற­னர். அதற்கேற்ப, சாத்­தான்­கு­ளத்­தில் போலி­சா­ரால் தாக்­கப்­பட்டு ஜெய­ராஜ், பென்­னிக்ஸ் ஆகி­யோர் உயி­ரி­ழந்த அதே நாளில் (ஜூன் 22) முரு­கே­சன் தாக்­கப்­பட்டு இறந்­து­விட்­டார்.