சென்னை: தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதும் 'உங்கள் தொகுதியில்
முதலமைச்சர்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நட வடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். முதல்வர் பதவி ஏற்று 40 நாட்கள் நிறைவடைந்த நிலையில் 30,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரியான ஷில்பா கூறியுள்ளார். "எல்லா மனுக்களையும் மின்னிலக்கமாக்கி, துறை வாரியாக அவற்றைப் பிரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்றார் அவர்.

