'நீட்'டை நீக்க பாஜக ஆதரவு தருமா: முதல்வர் ஸ்டாலின் கேள்வி

'நீட்'டை நீக்க பாஜக ஆதரவு தருமா: முதல்வர் ஸ்டாலின் கேள்வி

1 mins read
b558857a-17b5-4a4d-b291-a97a662756df
-

சென்னை: ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னம் மீதான விவா­தம் நேற்று (ஜூன் 23) இரண்­டா­வது நாளாக நடை­பெற்­றது.

அப்­போது, பாஜக உறுப்­பி­னர் நயி­னார் நாகேந்­தி­ரன் 'நீட்' தேர்வு விவ­கா­ரம் குறித்­துக் கேள்வி எழுப்­பி­னார்.

அதற்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் எழுந்து பதி­ல­ளித்­தார். "தமி­ழ­கத்­திற்கு 'நீட்' விலக்கு வேண்­டும் என்­ப­தில் ஆளும் கட்சி உறு­தி­யாக இருக்­கிறது. எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் அதி­மு­க­வும் அதே நிலைப்­பாட்­டில்­தான் உள்­ளது. மேலும், 'நீட்' விலக்கு கோரி சட்­டப்­பே­ர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

"அனைத்­துத் தரப்­பும் 'நீட்' விலக்­குக்கு ஆத­ர­வாக இருக்­கும் நிலை­யில் இதற்கு பாஜக ஆத­ர­வுக்­கு­ரல் கொடுக்­கத் தயாரா," என ஸ்டா­லின் கேள்வி எழுப்­பி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்த நயி­னார் நாகேந்­தி­ரன், "சட்­டத்­திற்கு உட்­பட்டு அது நடக்­கு­மா­னால் நாங்­கள் ஆத­ரவு தரு­கி­றோம்," எனக் கூறி­னார்.