செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
34dd90c3-77ff-4572-889f-0b37a1cedf77
-

பாஜ­க­வுக்­குள் குமு­றல்; வில­கல்

திருப்­பு­வ­னம்: பாஜக மூத்த தலை­வர் ஹெச்.ராஜா­வைக் கண்­டித்து சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பு­வ­னம் மேற்கு ஒன்­றிய பாஜக தலை­வர் பால­மு­ரு­கன் தனது பத­வியைவிட்டு விலகி­உள்­ளார். அத்­து­டன் இந்த ஒன்­றி­யத்­திலுள்ள 59 கிளை­களும் ஒட்­டு­மொத்­த­மா­கக் கலைக்­கப்­பட்­டன. அண்மையில் நடந்து முடிந்த சட்­டப் பேர­வைத் தேர்­த­லில் காரைக்­குடி தொகு­தி­யில் போட்­டி­யிட்ட பாஜக வேட்­பா­ளர் ஹெச்.ராஜா தோல்­வி­ய­டைந்­தார். தோல்விக்கு கட்சி நிர்­வா­கி­களே கார­ணம் என அவ­ரது தரப்­பில் தெரிவித்ததாகக் கூறப்­ப­டு­கிறது.

'ஒன்­றிய அரசு': ஸ்டா­லின் விளக்கம்

சென்னை: முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று சட்­டப் பேரவை யில் உரை நிகழ்த்­தி­ய­போது, "'ஒன்­றிய அரசு' என்று சொல் வதை ஏதோ சமூ­கக் குற்­றம்­போல யாரும் நினைக்­க­வேண் டாம். அப்­படி சிலர் கரு­து­வது முழுக்க முழுக்க தவறு," என்­றார். மேலும் அவர் கூறு­கை­யில், "ஒன்­றி­யம் என்ற வார்த்­தை­யைக் கேட்டு யாரும் மிர­ளத் தேவை­யில்லை. அந்த ஒரு வார்த்­தை­யில் கூட்­டாட்­சித் தத்­து­வம் அடங்­கி­யி­ருக்கிறது. அதற்­கா­கத்­தான் அதை நாங்­கள் பயன்­ப­டுத்­து­கி­றோம், பயன்­ப­டுத்­திக்கொண்­டே­யி­ருப்­போம்," என்­றார்.

பாலி­யல்: ஆசி­ரி­யர் கைது, நீக்­கம்

இரா­ம­நா­த­பு­ரம்: முது­கு­ளத்­தூர் பள்­ளி­வா­சல் மேல்­நி­லைப் பள்ளி அறி­வி­யல் ஆசி­ரி­யர் ஹபீப் முக­ம்மது, 32. இவர் தன்­னி­டம் பயி­லும் மாண­வி­க­ளி­டம் கைபேசி மூலம் ஆபாசமாகப் பேசி பாலி­யல் தொந்­த­ர­வில் ஈடு­ப­டு­வ­தாக சமூக ஊட­கங்­களில் தக­வல் பர­வி­யது. அதன் அடிப்­ப­டை­யில், பெண்­கள், குழந்­தை­க­ளுக்கு எதி­ரான தடுப்­பு­க்கா­வல் கூடு­தல் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் லயோலா இக்­னே­ஷி­யஸ் தலை­மை­யி­லான குழு­வி­னர் விசா­ரித்­த­னர். ஆசி­ரி­யர் ஹபீப் முக­மது ஜூன் 18ஆம் தேதி, மாணவி ஒரு­வ­ரின் வாட்ஸ்­அப் எண்­ணிற்கு செய்­தி­கள் அனுப்­பி­ய­தும் மறு­நாள் அதே மாணவியி­டம் பாலு­ணர்வை தூண்­டும் வகை­யில் பேசி, தொந்­த­ரவு செய்­த­தும் தெரிய வந்­தது. அத­னைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட ஹபீப் முக­ம்மதைப் பணி­யிடை நீக்­கம் செய்து மாவட்ட முதன்­மைக் கல்வி அலு­வ­லர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

­

ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள்

காரி­யா­பட்டி: விரு­து­ந­கர் மாவட்­டம் காரி­யா­பட்டி பி.புதுப்­பட்­டி­யில் மக­மாயி அம்­மன் கோயில் உள்­ளது. இங்கு மக­மாயி அம்­மன், வீர­பத்­தி­ரர், விநா­ய­கர், கருப்­ப­சாமி உள்ளிட்ட பத்து ஐம்பொன் சிலைகள் 400 ஆண்­டு­கள் பழ­மை­யா­னவை என்­றும் இதன் மதிப்பு ரூ.15 கோடி இருக்­கும் என்றும் தெரி விக்கப்பட்டது. இவற்றை கோயில் பூசாரி தமது வீட்­டின் பாதாள அறை­யில் பாது­காப்­பாக வைத்து பூசை செய்து

வந்­தார். இந்நிலையில், கோயில் தக்­கார் தேவி­ என்பவரும் போலிஸ் அதி­கா­ரி­களும் நேற்று முன்தினம் அவரிடமிருந்து பத்து சிலைகளையும் மீட்டனர். ஸ்ரீவில்­லி­புத்­தூர் ஆண்­டாள் கோயில் உலோ­கத் திரு­மே­னி­கள் பாது­காப்பு மையத்­திற்கு அவை கொண்டு செல்­லப்­பட்­டன.