இலவசப் பயணம்: நெகிழ்ந்த திருநங்கைகள்

இலவசப் பயணம்: நெகிழ்ந்த திருநங்கைகள்

1 mins read
16a6286a-d584-4257-b83d-7f40cb7558ea
சென்னையில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள். மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று குறைந்ததைத் தொடர்ந்து பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கி ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது தமிழக அரசு. படம்: இபிஏ-இஎஃப்இ -

சென்னை: அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் ேததி முதல் பேருந்தில் மாற்றுத் திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள், திருநங்கைகளும் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்த குமாரி கூறியபோது, "எங்களுடைய நீண்டநாள் கோரிக்கை இது. இலவச பேருந்துப் பயணம் என்பது எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வதற்கு பேருதவியாக இருக்கும், தமிழக அரசுக்கு நன்றி," என்று நெகிழ்ந்துள்ளார்.