சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து ேநற்று பேசுகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற திரைப்படம் போல் பிப்ரவரி 26 முதல் மே 6 வரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிமுக மறந்துவிட்டதா? மார்ச் முதல் மே 7ஆம் தேதி வரை ஏற்பட்ட கொரோனா பாதிப்பு களுக்கு அதிமுகவே காரணம்," என்று குற்றம்சாட்டினார்.
"திமுக ஆட்சிக்கு வந்தபோது தடுப்பூசி, உயிர்வாயு பற்றாக்குறை என பல பிரச்சினைகளால் அல்லா டும் நிலை இருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்," என்றார்.
"கடந்த அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கள் திரும்பப் பெறப்படும். எட்டு வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகப் போராடி யவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்படும்," என்றார்.

