தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹரியானாவில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன் அமீர் வாக்குமூலம் யூடியூப் காெணாளி பார்த்து கொள்ளை

2 mins read
3bd92ef1-78ee-426a-8d70-d14c0b778d81
கொள்ளையன் அமீர். வலது: ஏடிஎம் மையங் களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான ெகாள்ளையர்கள்.படங்கள்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழகம் முழுவதும் 24 ஏடி­எம் மையங்­களில் நான்கு நாள்­களில் 485 முறை நூதன திருட்­டில் ஈடு­பட்­ட­தா­க­வும் யூடி­யூப் காெணாளி­யைப் பார்த்து ரூ.1 கோடி வரை கொள்ளை அடித்திருப்­ப­தா­க­வும் போலி­சா­ரின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் கைதாகி உள்ள மூன்று கொள்ளையர்கள் தெரிவித்து உள்ளனர்.

வட­மா­நி­லத்தைச் சேர்ந்த எஸ்­பிஐ வங்கி ஊழி­யர்­க­ளுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்­பதாக அவர்கள் கூறினர்.

தமி­ழ­கத்தின் பல்­வேறு இடங்­களிலும் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தி­யா­வின் (எஸ்பிஐ) பணம் நிரப்­பும் வசதி கொண்ட ஏடி­எம் இயந்­தி­ரங்­களில் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளை அடித்து விட்டு திருடர்கள் தப்­பி­யோ­டி­னர்.

அதிர்ச்­சி­யூட்­டும் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில், ஹரி­யா­னா­வில் தலைமறை­வாக இருந்த வட­மா­நிலக் கொள்ளையர்­கள் மூவரை தனிப்­படை போலி­சார் கைது செய்­த­னர்.

ஏடி­எம் மையங்­களில் பதி­வான சிசி­டிவி காட்­சி­க­ளைக் கொண்டு விசா­ரணை நடத்­தி­ய­தில், இக்கும்­பல் சென்னை, திரு­வல்­லிக்­கேணி யில் இரு­சக்­கர வாக­னத்தை வாட­கைக்கு எடுத்­துக்­கொண்டு கைவ­ரி­சை காட்டியது தெரி­ய­வந்­தது.

இரு­சக்­கர வாக­னக் கடைகளில் பதி­வான கைபேசி எண்­க­ளைக் கொண்டு விசா­ரணை நடத்­திய தனிப்­படை போலி­சார், முக்­கிய குற்றவாளி அமீர், 37, என்­ப­வ­ரை ஹரி­யானாவில் கைது செய்­த­னர். அமீர் அளித்த தக­வ­லின்­படி மேலும் இரு­வர் கைது ெசய்யப்பட்டனர்.

போலி­சா­ரி­டம், அமீர் அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்தில், "ஹரி­யானா மாநி­லம், பல்­லப்­கர்க் பகுதி­யில் வசித்து வரு­கி­றேன். நானும் என் கூட்­டா­ளி­களும் ஐந்து குழுக்­க­ளாகப் பிரிந்து சென்­னை­யில் ஜூன் 15 முதல் 18 வரை எஸ்­பிஐ வங்­கி­யின் ஏடிஎம்களில் கொள்­ளை­யடித்­தோம். என்­னி­டம் இருந்து ரூ.4.50 லட்­சத்தை போலிசார் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்," என்றார்.

மற்ற கொள்ளையர்­களைப் பிடிக்க தனிப்­படை போலி­சார் ஹரி­யா­னா­வில் முகாமிட்­டுள்­ள­னர்.

'கூகல் மேப்' உத­வி­யு­டன் இந்தக் கொள்ளை சம்­ப­வம் நடந்­துள்­ளதாக உயர் போலிஸ் அதி­கா­ரி­கள் கூறி னர். இந்த வழக்கு விசா­ரணை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலிசுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.