சென்னை: தமிழகத்தின் மேற்கு மாவட்டமான கோவையை நாங்கள் எந்தவிதத்திலும் புறக்கணிக்க வில்லை. வருங்காலத்தில் மக்கள் வியப்படையும் வகையில் இன்னும் அங்கு அதிகமான நவீன மேம்பாடு களைச் செய்யவுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
"டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மனு அளித்தபோதுகூட கோவையில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.
சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.
திமுக தலைமையிலான அரசு எல்லோருக்குமான அரசு என ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்படிக் கூறினாலும் மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டத் திட்டத்தில் கோவை நகரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த நகரத்தைப் புறக்கணிக்க வேண்டும்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர், "அவையில் தவறான கருத்துகளைக் கூறவேண்டாம். கோவையை எந்தக் காரணம் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். இன்னும் அங்கு அதிகமாக பணிகளைச் செய்வோம். அனை வரும் ஏற்றுக்கொள்ளும் வகை யில் எங்களது பணிகள் அமையும்.
"மக்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்தார் கள் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறோம். அனை வருக்குமான அரசாக திமுக அரசு திகழும்," என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
எங்களுக்கு வாக்களித்தவர்கள் பெருமையும் வாக்களிக்காதவர்கள் வருத்தமும் அடையவேண்டும் என்பதே எங்களது கொள்கை. கோவையை எவ்விதத்திலும் புறக்கணிக்கவில்லை. மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னும் அதிகமான பணிகளை அங்கு செய்ய உள்ளோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்