'வங்கி வேலையை இழந்தவர்களின் உதவியுடன் கொள்ளையடித்தோம்'

'வங்கி வேலையை இழந்தவர்களின் உதவியுடன் கொள்ளையடித்தோம்'

2 mins read
f307c9f2-a004-4318-980e-0b0cb2a190b6
-

சென்னை: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தி­யா­வின் (எஸ்­பிஐ) பணம் நிரப்­பும் வசதி கொண்ட ஏடி­எம் இயந்­தி­ரங்­களில் நூதன முறை­யில் கொள்­ளை­ய­டித்த வட­மா­நில கும்­பல் தலை­வன் அமீர் அர்­ஷி­டம், 37, போலி­சார் ரக­சிய இடத்­தில் வைத்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

வியா­ழ­னன்று மாலை விமா­னம் மூலம் சென்­னைக்கு அழைத்து வரப்­பட்ட அமீ­ரி­டம் தனிப்­படை போலி­சார் தொடர்ந்து விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர். அமீர், பல அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல்­களை வாக்கு­மூ­ல­மா­கக் கூறி­யுள்­ளார்.

"இதே வங்­கி­யில் பணி­பு­ரிந்த முன்­னாள் ஊழி­யர்­க­ளின் உதவி யுடன்­தான் நாங்­கள் இக்­கொள்ளை யில் துணிந்து இறங்­கி­னோம்.

"தமி­ழ­கம் முழு­வ­தும் ஏறக்­குறைய ரூ.1 கோடி வரை கொள்ளை அடித்­துள்­ளோம்.

"ஹரி­யானா மாநி­லம், பல்­லப்­கர் நக­ரில் வசித்து வந்த என்­னி­டம் வறுமை காரணமாக பட்­டம், பட்­ட­யப் படிப்பு படித்துள்ள இளை­ஞர்­கள் பணிபுரிந்து வந்தனர்.

"நான்­தான் கொள்­ளைக் கும்­ப­லின் தலை­வ­னாக செயல்­பட்டு வந்­தேன். எங்­கள் நண்­பர்­களில் சிலர் எஸ்­பிஐ வங்­கி­யில் தொழில் நுட்­பப் பிரி­வில் வேலை பார்த்து வந்­த­னர். அவர்­கள் பண மோச­டி­யில் ஈடு­பட்­ட­தால் வேலையை விட்டு நிறுத்­தப்­பட்­ட­னர்.

"இதைத்­தொ­டந்து, எஸ்­பிஐ வங்­கி­யின் 'டெபா­சிட்' இயந்­தி­ரங்­களில் கொள்­ளை­ய­டிக்­கும் நுணுக் கம் எங்­க­ளுக்­குத் தெரியவந்­தது.

"இது­கு­றித்து எங்­கள் கும்­ப­லில் உள்ள அனை­வ­ருக்­கும் ஆறு மாதம் பயிற்சி அளித்­தோம்.

"கொள்­ளை­ய­டித்த பணத்­தில் 30% எனக்கு; 70% மற்­ற­வர்­க­ளுக்கு பிரித்­துக் கொடுத்­து­வி­டு­வேன்.சென்­னைக்கு ஐந்து குழுக்­க­ளாக 10 பேர் ரயி­லில் வந்­தோம். 'கூகல் மேப்' உத­வி­யு­டன் 'மொபைல் ஆப்' வாயி­லாக அறை எடுத்து தங்கி னோம். அதன்­பின்­னர், இரு­வர் வீதம் பிரிந்து கொள்­ளை­ய­டித்து விட்டு விமா­னம், ரயில், வட மாநி­லம் செல்­லும் சரக்கு வாகனத்­தில் தப்­பிவிடுவது திட்­டம். அதன்­படி, நால்­வர் மட்­டும் தப்­பிச்­சென்­றோம்," என்று கூறி­யுள்­ளார்.

அமீரை பூந்­த­மல்லி நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி, சிறை­யில் அடைக்க இருப்­ப­தாக போலி­சார் தெரி­வித்­துள்ளனர்.