சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருமி பாதிப்பு குறைந்து வரும் 23 மாவட்டங்களிலும் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்க அனுமதிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங் கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலை யில் ஜவுளிக்கடை, நகைக்கடைகளைத் திறப்பது குறித்தும் ஆலோசனை நடந்துள்ளதாவும் இந்தக் கடைகளுக்கும் அனுமதி கிடைக்கலாம் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆனாலும் கொரோனா மேலும் அதிகரித்துவிடாமல் தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைத் தொடர்வதும் முக்கியம் என்று மருத்துவக் குழுவினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
இந்த ஆலோசனை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி அன்றாட தொற்று பாதிப்பு 6,162 ஆகவும் பலி எண்ணிக்கை 155 ஆகவும் இருந்தது.
மதுரையில் இருந்து வெளிநாட்டு விமான சேவை
கொரோனா கட்டுப்பாடுகளுடன் வரும் ஒன்றாம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து வெளி நாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் உள்நாட்டுச் சேவை கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் மதுரை விமான நிலை யத்திலிருந்து மீண்டும் துபாய்க்கு விமானச் சேவை தொடங்கவுள்ள தாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

