தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளாட்சித் தேர்தல்: தீவிர ஆலோசனையில் கட்சிகள்

1 mins read
192d49e7-3323-4a58-a6f5-a2ee998282fa
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­ப­டாத ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் இனி­யும் காலம் தாழ்த்­தா­மல் செப்­டம்­பர் 15ஆம் தேதிக்­குள் தேர்­தலை நடத்தி முடிக்­கு­மாறு உச்­ச­ நீ­தி­மன்­றம் உத்­த­ர விட்­டு இருந்­தது.

இதைத்­தொ­டர்ந்து இந்த தேர்­தலை எதிர்­கொள்ள திமுக, பாஜக, மநீம உள்­ளிட்ட கட்­சி­கள் தயா­ராகி வரு­கின்­றன.

அண்ணா அறி­வா­ல­யத்­தில் திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் மாவட்டச் செய­லாளர்­கள், உயர் அதி­கா­ரி­க­ளு­டன் நேற்று ஆலோ­சனை நடத்தப்பட்டது.

இந்­நி­லை­யில், இந்த உள்­ளாட்­சித் தேர்­தல் தேதி விரை­வில் அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதேேபால் பாஜ­க­வும் தீவிர ஆலோ­சனை மேற்­கொண்டு வரு­கிறது.

சென்னை கம­லா­ல­யத்­தில் உள்ள பாஜக அலு­வ­ல­கத்­தில் மாநில தலை­வர் எல்.முரு­கன், தமி­ழக பாஜக இணை பொறுப்­பா­ளர் சுதா­கர் தலை­மை­யில் மாநிலச் செயற்­குழு கூட்­டம் காணொளி வாயி­லாக நேற்று நடை­பெற்­றது. அதில் உள்­ளாட்சித் தேர்­தல், பாஜக வளர்ச்சிப் பணி உள்­ளிட்­டவை குறித்து ஆலோசிக்கப்­பட்­டது.

இந்நிலை­யில், மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் தலை­வர் கம­ல­ஹாசன் நாளை தனது கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் முக்­கிய ஆலோ­சனை நடத்த உள்­ளார். புதிய நிர்­வா­கி­கள் நிய­ம­னம், உள்­ளாட்சித் தேர்­தலுக்கு தயா­ரா­வது தொடர்­பாக ஆலோ­சனை நடை­பெ­றும் என்­றும் கூறப்­படு­கிறது.