சென்னை: தமிழகத்தில் மூவருக்கு 'டெல்டா பிளஸ்' கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக ஓய்ந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், புதி தாக பரவிவரும் 'டெல்டா பிளஸ்' கிருமித்ெதாற்று மூன்றாம் அலைக்கு காரணமாகலாம் என எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த 'டெல்டா பிளஸ்' கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்திலும் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதியானது.
சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அமைச்சர், "தமிழகத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி, எச்சில் மாதிரிகள், பெங்களூருவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. மொத்தம் 1,100 மாதிரிகளில் மூவருக்கு 'டெல்டா பிளஸ்' பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
"சென்னை கொரட்டூர் பகுதி, காஞ்சிபுரம், மதுரையைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டு இருப்ப தாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை," எனவும் அவர் கூறினார்.

