திருச்சி: தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் படிப்பில் பின்தங்கி விடாமல் இருக்க தண்டோரா போட்டு ஊக்கமூட்டி வருகி றார் தலைமை ஆசிரியர் ஒருவர்.
திருச்சி மாவட்டம், உப்பிலியா புரம் அருகே உள்ள வெங்கடா சலபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார் வா.ரவிச் சந்திரன். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றவர்.
ரவிச்சந்திரன், தான் பணிபுரியும் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங்களில் தண்டோரா போட்டு மாணவர், பெற்றோருக்கு அறிவிப்பு களை விடுத்து வருகிறார்.
"மாணவர்களுக்காக கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதில், வகுப்புகள் நடை பெறும் அட்டவணையும் உள்ளது. எனவே, வீட்டில் இருக்கும் மாண வர்கள் கல்வித் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்து பயன்பெற வேண்டும். பெற்றோரும் மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்," என்று அறிவித்தபடியே செல்கிறார்.
"பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களின் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காகவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகி றேன். இதற்கு கிராம மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்," என்றார்.

