‘உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வலியுறுத்து’

சென்னை: மக்­கள் நீதி மய்­யம் கட்­சிக்கு புதிய நிர்­வா­கி­களை நிய­ம­னம் செய்­துள்ள இக்­கட்­சித் தலை­வர் கமல்­ஹா­சன், தமிழகத்­தில் விரை­வில் உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், அதற்­குத் தயா­ரா­கும்­படி கட்சி உறுப்­பி­னர்­களை வலி­யு­றுத்தி கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் போது 3.7%ஆக இருந்த மநீ­ம­வின் வாக்கு வங்கி, சட்­ட­மன்­றத் தேர்தலின்போது 2.45% ஆகக் குறைந்­தது.

அதன்பின்னர், தேர்­தல் தோல்­விக்­குப் பிறகு கட்­சி­யின் துணைத் தலை­வர் மகேந்­தி­ரன், முக்­கிய நிர்­வா­கி­களான முருகானந்­தம், சி.கே.கும­ர­வேல், சந்­தோஷ் பாபு உள்­ளிட்­டோர் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.

இவர்கள் அனை­வ­ரும், தோல்­விக்கு முக்­கிய கார­ணம் கமல்­ஹா­சன்­தான் என்ற குற்­றச்­சாட்­டை­யும் கூறிவிட்டுச் சென்றனர்.

இதைத்­தொ­டர்ந்து, "கட்­சியை சீர­மைப்­பேன். புதிய நிர்­வா­கி­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள்," என்று கமல்­ஹா­சன் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், நேற்று காலை இணை­ய­வ­ழி­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் பேசிய கமல்­ஹா­சன், "மண், மொழி, மக்­க­ளைக் காக்க களமிறங்கிய மநீம கட்­சியை வலுப்­ப­டுத்­த­ சில புதிய நிய­ம­னங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றேன்.

"கட்­சித் தலை­வர் என்ற பொறுப்­பு­டன் பொதுச்­செ­ய­லா­ளர் என்ற பொறுப்­பை­யும் கூடு­த­லாக நான் ஏற்­றுச் செயல்­பட உள்ளேன். பழ.கருப்­பையா, ெபான்­ராஜ் ஆகி­யோர் அர­சி­யல் ஆலோ­ச­கர்­க­ளாகவும் ஏ.ஜி.மௌரியா- துணைத் தலை­வர் (கட்­ட­மைப்பு), தங்­க­வேலு - துணைத் தலை­வர் (களப்­பணி, செயல்­ப­டுத்­து­தல்) உள்ளிட்ட ஒன்பது பேரை நிய­மித்­துள்­ளேன்," என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!