திருப்பதி கோவிலுக்கு திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு

திருப்பதி கோவிலுக்கு திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு

1 mins read
7008c7f2-8b66-40ff-bfee-e42a3e86b746
-

திண்­டுக்­கல்: திருப்­பதி ஏழுமலை­யான் கோவி­லுக்கு திண்­டுக்­கல்­லில் இருந்து தலா 5 கிலோ எடை­யில் இரண்டு பெரிய வகை மாங்­காய் பூட்டுகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு பூட்­டின் விலை ரூ.10,000 என்று கூறப்படுகிறது.

திண்­டுக்­கல் என்­றாலே பூட்டு தான் நினை­வுக்கு வரும். மாங்­காய் பூட்டு, மணி பூட்டு, தொட்டி பூட்டு என விதவிதமான பூட்­டு­கள் இங்கு தயாரா­கின்­றன. பெரிய கத­வு­கள் கொண்ட பல்­வேறு கோவில்­களிலும் இங்கு தயாரான பூட்­டு­களே இன்றுவரை பயன்­படுத்­தப்­பட்­டு வருகிறது.

பூட்டு தயா­ரிப்­பா­ளர் முரு­கே­சன் (படம்) கூறுகையில், "கடந்த 43 ஆண்­டு­க­ளாக பூட்டு தயா­ரிப்­பில் ஈடு­பட்­டு வருகிறேன். கை வேலைப்பாட்டில் தமி­ழ­கத்தில் உள்ள பல கோவில்­க­ளுக்கும் பூட்டு தயாரித்துக் கொடுத்துள்ளேன். தற்­போது திருப்­பதி கோவி­லுக்­காக பித்தளையில், ஐந்து நாள்களாக மாங்­காய் பூட்டு தயா­ரித்­துள்­ளேன். நலி­வ­டைந்து வரும் பூட்டு தொழி லைப் பாதுகாக்க அரசு நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்," என கோரினார்.