மோடி: தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் இந்தியாவிற்கே பெருமை

மோடி: தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம் இந்தியாவிற்கே பெருமை

1 mins read
bc384910-eb83-4da1-871f-03308a345a5d
-

சென்னை: உல­கின் ஆகப் பழ­மை­யான மொழி­யான தமிழ் மொழி இந்­தி­யா­வுக்­குச் சொந்­த­மா­னது என்­றும் அதை எண்ணி இந்­தி­யர்­கள் அனை­வ­ரும் பெருமை கொள்ள வேண்­டும் என்­றும் பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு மாத இறுதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மன­தின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்­க­ளுக்கு உரையாற்றிவரும் பிரதமர் திரு மோடி, தமிழ்­மொழியை எண்ணி தான் எப்­போ­தும் பெரு­மி­த­மும் கர்­வ­மும் கொள்­வ­தா­க நேற்றுக் குறிப்­பிட்­டார்.

"மிக­வும் சிறப்பு வாய்ந்த, தொன்மை­யான தமிழ்­மொ­ழி­யும் தமிழ்க் கலா­சா­ர­மும் என் நெஞ்­சை­விட்டு என்­றுமே அக­லாது," என்று பிரதமர் கூறி­னார்.

சென்­னை­யைச் சேர்ந்த குரு பிர­சாத் என்­ப­வர், மன­தின் குரல் நிகழ்ச்­சி­யில் தமிழ் மொழி, தமிழ்க் கலா­சா­ரம், தமிழர்­கள் பற்றி தான் இதுநாள்வரை தெரி­வித்து வந்­திருப்­பதை எல்லாம் ஒன்­று­தி­ரட்டி மின்­னி­லக்கப் புத்­த­கம் ஒன்­றைத் தயா­ரித்து அதை நமோ (NamoApp) செயலியில் வெளியிட விரும்பு­வ­தா­க­வும் இதற்­காக அவ­ரைத் தான் வாழ்த்­து­வ­தா­க­வும் திரு மோடி தெரி­வித்­துள்­ளார்.