உருமாறிய கிருமி ஒருவரை கொன்றது; 9 பேர் பாதிப்பு

உருமாறிய கிருமி ஒருவரை கொன்றது; 9 பேர் பாதிப்பு

2 mins read
18c3af0b-59ed-4913-b037-7e4c26ceaf57
-

டெல்டா பிளஸ் தொற்று: எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுரை

சென்னை: தமிழ்­நாட்­டில் உரு­மா­றிய டெல்டா பிளஸ் கொவிட்-19 கிருமி கார­ண­மாக ஒரு­வர் மர­ண­ம­டைந்து விட்­ட­தா­க­வும் நேற்று வரை ஒன்­பது பேர் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அந்த மாநி­லத்­தின் சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மா சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தில் தொற்று தொடர்ந்து குறைகிறது என்­றா­லும் டெல்டா பிளஸ் கிரு­மியை மன­தில் கொண்டு அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

சென்னை, காஞ்­சி­பு­ரம், மதுரை ஆகிய மூன்று மாவட்­டங்­களில் டெல்டா பிளஸ் கண்­ட­றி­யப்­பட்டு உள்­ள­தாகத் தெரி­வித்­த மத்­திய அரசு, டெல்டா பிளஸ் கிரு­மித்­தொற்றை ஒடுக்­கு­வ­தற்கு ஆன அனைத்து முயற்­சி­க­ளை­யும் உட­னடி­யாக எடுக்­கும்­படி தமி­ழக அர­சுக்கு உத்­த­ர­விட்டு உள்­ளது.

டெல்டா பிளஸ் தலை­தூக்கி உள்ள பகு­தி­களில் பரி­சோ­த­னை­களை­யும் துப்­பு­ரவு நட­வ­டிக்­கை­களை­யும் தடுப்பூசி இயக்கத்தையும் தீவிரப்படுத்தும்படி அது அறிவுறுத்தி உள்­ளது.

டெல்டா பிளஸ் கிருமி வேகமாக தொற்­றக்­கூ­டி­யது என்­றும் நுரை­யீ­ர­லில் இறுக்­க­மாக ஒட்­டிக்­கொள்ளக்கூடி­யது என்­றும் மருந்து­களுக்கு அவ்­வ­ளவு எளி­தில் கட்­டுப்­ப­டாத கிருமி என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இவ்­வே­ளை­யில், சென்னை, மதுரை, கோவை நக­ரங்­களில் டெல்டா பிளஸ் பரி­சோ­தனை மையங்­களை அமைக்க முதல்­வர் உத்­த­ர­விட்டு உள்­ள­தாக மாநி­ல நிதி அமைச்­சர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் நேற்று கூறினார்.

இதனிடையே, சனிக்­கி­ழ­மை­தமிழ்­நாட்­டில் 170,963 பேருக்குப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அவர்­களில் 5,415 பேருக்குத் தொற்று இருந்­தது தெரி­ய­வந்­த­தா­க­வும் 24 மணி நேரத்­தில் 148 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் மாநி­லத்­தின் நல்­வாழ்­வுத் துறை அமைச்சின் அறிக்கை தெரி­வித்­தது.