3,000 கோயில்கள் இன்று திறப்பு

1 mins read
1a558c16-47fe-4fc0-a391-8f146c5fb46a
சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயில் சுத்தப் படுத்தப் பட்டது. படம்: தி இந்து -

சென்னை: கொவிட்-19 காரணமாக சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும் மூடப்பட்டு இருந்த ஏறத்தாழ 3,000 கோயில்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

இதனையொட்டி கோயில்கள் சுத்தப்படுத்தப்பட்டன. ஆலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

அந்தக் கோயில்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.