கொரோனா மாத்திரை என்று நச்சு மாத்திரை; மூவர் கொலை

கொரோனா மாத்திரை என்று நச்சு மாத்திரை; மூவர் கொலை

1 mins read
729e2ffe-7a61-4380-9635-caec42dc5b63
-

ஈரோடு: ஈரோடு அருகே மாத்­திரை சாப்­பிட்டு மூவர் அடுத்­த­டுத்து உயி­ரி­ழந்தனர். இந்த விவ­கா­ரத்­தில் நேற்று திடீர் அதிர்ச்சித் தக­வல்­கள் வெளி­யா­யின.

கொரோனா பரி­சோ­தனை எனக்­கூறி நச்சு மாத்­திரை கொடுத்து அந்த மூவ­ரை­யும் பக்­கத்து வீட்டுக்­கா­ரரே கொலை செய்­தது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

சென்­னி­மலை அருகே அம்­மா­பா­ளை­யத்­தில் வசித்த மல்­லிகா, குப்­பம்­மாள், தீபா ஆகிய மூன்று மாதர்­களும் மாத்­தி­ரையைச் சாப்­பிட்டு பிறகு உயிர் இழந்­த­னர்,

அவர்­கள் கொலை செய்­யப்­பட்டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர். மல்­லி­கா­வின் பக்­கத்து வீட்­டில் வசித்த கல்­யா­ண­சுந்­த­ரம் என்­ப­வரே இந்த படு­பா­தகச் செய­லைச் செய்து இருக்­கி­றார் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

மல்­லி­கா­வி­டம் வாங்­கிய ரூ.6.5 லட்­சம் கட­னைத் திருப்­பிக் கேட்­ட­தால் அவ­ரது குடும்­பத்­திற்கே நஞ்சு கொடுக்­கப்­பட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

கல்­யா­ண­சுந்­த­ரம் ஏற்­பாட்­டின் பேரில் மல்­லிகா குடும்­பத்­துக்கு நச்சு மாத்­திரை கொடுத்த சபரி என்ற கல்­லூரி மாண­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

தனக்கு ஊராட்­சி­யில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி கல்­யா­ண­சுந்­த­ரம் தன்னை இந்­தக் காரி­யத்­தைச் செய்­யும்­படி கேட்­டுக்­கொண்­ட­தாக சபரி போலி­சி­டம் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

போலிசார் கல்­யா­ண­சுந்­த­ரத்தை தொடர்ந்து விசாரிக்கிறார்கள்.