சென்னை: பாமகவின் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சென்னை ஆயிரம் விளக்கில் காணொளி மூலம் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் 14-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.
அது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் 96 முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
பாமகவின் அறிக்கையை, பாமகவின் திட்டமாகக் கருதாமல், வேளாண் பெருமக்களின் திட்டமாக தமிழ்நாடு அரசு கருத வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பாமகவின் வேளாண் நிதிநிலை அறிக்கையைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அனைத்து மாவட்டங்களிலும் உணவு பதன தொழிற்சாலை, ஏற்றுமதி மையங்கள், வேளாண் கல்வி பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பலவும் அறிக்கையில் உள்ளன.

