பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

1 mins read
8491476e-3b27-47bb-98fd-64c1d920bd6e
-

சென்னை: பாம­க­வின் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதி­நிலை அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

அந்­தக் கட்­சி­யின் நிறு­வ­னர் ராம­தாஸ், சென்னை ஆயி­ரம் விளக்­கில் காணொளி மூலம் நடந்த நிகழ்ச்­சி­யில் கட்சியின் 14-வது வேளாண் நிழல் நிதி­நிலை அறிக்­கையை வெளி­யிட்­டார்.

அது 50 லட்­சம் புதிய வேலை­வாய்ப்­பு­களையும் 96 முக்­கிய அம்­சங்­களையும் கொண்­டுள்­ளது.

பாம­க­வின் அறிக்­கையை, பாம­க­வின் திட்­ட­மா­கக் கரு­தா­மல், வேளாண் பெரு­மக்­க­ளின் திட்­ட­மாக தமிழ்­நாடு அரசு கருத வேண்­டும் என்று மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்­கொண்­டார்.

அடுத்த மாதம் தாக்­கல் செய்­யப்­படும் தமிழ்­நாடு நிதி­நிலை அறிக்­கை­யில் பாம­க­வின் வேளாண் நிதிநிலை அறிக்­கை­யைச் சேர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டு­க்கொண்­டார்.

அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் உணவு பதன தொழிற்­சாலை, ஏற்று­மதி மையங்­கள், வேளாண் கல்வி பல்­க­லைக்­க­ழ­கங்­கள் உள்­ளிட்ட பல­வும் அறிக்­கை­யில் உள்ளன.