செல்லூர் ராஜு: அமைச்சருக்கு நோபெல் பரிசு வழங்குங்கள்

செல்லூர் ராஜு: அமைச்சருக்கு நோபெல் பரிசு வழங்குங்கள்

2 mins read
6eb02e71-024d-4b02-8a24-2c4c3186d6d3
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியில் மின்கம்பம் ஒன்றில் மரநாய் இறந்து கிடந்ததால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்ட தாக, இந்தப் படத்தை வெளியிட்டு மின்சாரத் துறை ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். படம்: தமிழக ஊடகம் -

மதுரை: தமிழ்­நாட்­டில் அப்­போதைக்கு அப்­போது மின்­தடை ஏற்­ப­டு­வ­தற்கு முந்­தைய ஆட்­சி­யின் குறை­பா­டு­களும் அணில் போன்ற பிரா­ணி­களும் ஏற்­ப­டுத்­தும் தொல்­லை­களும் கார­ணம் என்று மின்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்து இருந்­தார்.

இதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அவர் பல படங்­க­ளை­யும் இணை­யத்­தில் வெளி­யிட்டு இருந்­தார்.

ஆனால் இந்த விவ­கா­ரம் இணை­யத்­தி­லும் சமூக ஊட­கங்­க­ளி­லும் பெரும் கேலிக்­கும் கிண்­ட­லுக்­கும் ஆளாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், முன்­னாள் அதி­முக அமைச்­ச­ர­வை­யில் கூட்டு­ற­வுத்­ துறை அமைச்­ச­ராக இருந்த செல்­லூர் ராஜு, அணில் கண்­டு­பி­டிப்­பிற்­காக திரு செந்­தில் பாலா­ஜிக்கு நோபெல் பரிசு கொடுக்க வேண்­டும் என்று கிண்­ட­ல­டித்து இருக்­கி­றார்.

"நல்ல வேளை, நான் பிழைத்­துக்கொண்­டேன். தெர்­மா­கோல் விட்­ட­தற்­காக என்னை நவீன விஞ்­ஞானி என்று திமுகவினர் கிண்­டல் செய்­தார்­கள்.

"இப்­போது என்னை விஞ்சி அணிலைக் கண்­டு­பி­டித்து உள்­ளார் மின்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி.

எங்­கள் ஆட்­சி­யில் அணில் எல்லாம் வெளிநாடு­க­ளுக்குச் சென்றுவிட்­டன போல. இந்த ஆட்­சி­யில்தான் அணில் மின் கம்­பி­யில் போகிறது.

"இதைக் கண்­டு­பி­டித்த செந்­தில் பாலா­ஜிக்கு நோெபல் பரிசு கொடுக்க வேண்­டும் என கேட்­டுக் கொள்­கி­றேன்," என்று மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது திரு செல்­லூர் ராஜு கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு, அமைச்­சராக இருந்த திரு செல்­லூர் ராஜுவின் திட்­டப்­படி, வைகை அணை­ நீர் ஆவி­யா­கா­மல் தடுக்க அணை­களில் உள்ள நீர்நிலை­களை அதிகாரிகள் தெர்­மா­கோல் அட்டை­களால் மூடி­னார்­கள்.

ஆனால் அட்­டை­கள் அனைத்­தும் கரை ஒதுங்­கி­ய­தால் அத்திட்­டம் தோல்­வி­ய­டைந்­தது.

அது சமூக வலைத்­தளங்­களில் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்­ளா­னது.