தமிழக முதல்வரின் வாயால் தன்னைப் பாராட்டும்படி செய்த பாட்டிக்கு மாதாமாதம் தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ.2,000 பணத்தை அவரது பராமரிப்புக்கு கொடுத்து உதவப் போவதாக புகைப்படக்காரர் ஜாக்சன் ஹெர்பி தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 பெற்ற பாட்டியின் மகிழ்ச்சி யைப் புகைப்படக்காரர் ஒருவர் படம் பிடித்திருந்தார்.
அந்தப் படம் சமூக வலைத் தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, ஜாக்சன் ஹெர்பியை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டு களைத் தெரிவித்தார்.
இந்தப் பாராட்டில் நெகிழ்ந்து போன ஜாக்சன் ஹெர்பி, முதல்வரின் பாராட்டுக்குரிய புகைப்படத்திற்கு காரணமாக இருந்த பாட்டியைத் தூக்கி அவருக்கு மாதம் ரூ.2,000 செலவுக்கு கொடுத்து உதவப் போவதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணையாக ெகாரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கியது.
அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஏழை பாட்டி, சிரிப்பின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை நாகர்கோயில் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் அழகாகப் படம் பிடித்திருந்தார். அந்தப் படத்தில் உள்ள எதார்த்தம் அவரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்கியது.

