கொள்ளையடித்தது எப்படி என நேரில் நடித்துக் காட்டிய திருடன்; அதிர்ந்து போன போலிசார்

கொள்ளையடித்தது எப்படி என நேரில் நடித்துக் காட்டிய திருடன்; அதிர்ந்து போன போலிசார்

1 mins read
289cbddc-5831-424e-a6da-b287945e7a74
போலிசார் முன்னிலையில் பெரியமேடு பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், எந்த ஏடிஎம் அட்டையைக் கொடுத்தாலும் 19 விநாடிக்குள் பணத்தை எடுத்துக்காட்டும் கொள்ளையன் அமீர் அர்ஷ். படம்: ஊடகம் -

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தது எப்படி என கொள்ளையன் அமீர் அர்ஷ் 2 மணி நேரம் நடித்துக் காட்டினான்.

எந்த ஏடிஎம் அட்டையைக் கொடுத்தாலும் 19 விநாடிக்குள் நேரடி விளக்கக் காட்சியாக பணத்தை எடுத்துக்காட்டி போலிசாரை அசரவைத்தான்.

இந்தக் காட்சிகளை காணொளியாகவும் போலிசார் பதிவு செய்தனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிைறயில் அடைக்கப்பட்டனர்.

அமீர் அர்ஷை ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து போலிசார் விசாரித்து வருகின்றனர். தாம் உள்பட ஒன்பது பேர் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக போலிசாரிடம் அமீர் அர்ஷ் கூறியுள்ளான்.

இக்கொள்ளையில் தொடர்புடைய மூன்றாவது இளையரான நசீர் உசேன், 22, என்பவரையும் போலிசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தக் கொள்ளையில் மூளையாகச் செயல்பட்டு தலைமறைவாக உள்ள சதகத்வுல்லாகான் உள்பட ஆறு பேரை ஹரியானாவில் முகாமிட்டு தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்