சிறையில் சொகுசு வசதி; புழல் சிறைக்கு மணிகண்டன் மாற்றம்

சிறையில் சொகுசு வசதி; புழல் சிறைக்கு மணிகண்டன் மாற்றம்

1 mins read
412328c0-0028-4995-b321-c473bbb71427
-

திரு­வள்­ளூர்: பாலி­யல் குற்­றச்­சாட்டு தொடர்­பில் கைது செய்­யப்­பட்டு, சைதாப்­பேட்டை கிளைச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன், அங்கே சொகு­சாக இருந்து வரு­வது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, சென்னை அருகே திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் அமைந்­துள்ள புழல் மத்­திய சிறைக்கு அவர் மாற்­றப்­பட்­டார்.

மணி­கண்­ட­னுக்­குச் சிறை­யில் சொகுசு வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்த காவ­லர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­வும் உயர் அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

சில சிறை அதி­கா­ரி­க­ளின் உடந்­தை­யோடு சைதாப்­பேட்டை சிறை­யில் குளிர் சாதன வசதி, சோபா, கைபேசி, மின்னேற்றி உள்­ளிட்ட சொகுசு வச­தி­க­ளோடு மணி­கண்­டன் இருப்­ப­தைக் கண்­டு­பிடித்து, புகைப்­பட ஆதா­ரங்­க­ளு­டன் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, சிறைத்­து­றை­யின் உயர் அதி­காரி தலை­மை­யில் சைதாப்­பேட்டை கிளைச் சிறை­யில் போலி­சார் நடத்­திய திடீர் சோதனை யில் மணி­கண்­ட­னுக்கு சொகுசு வச­தி­கள் செய்­யப்­பட்­டி­ருப்­பது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

இதைத்­தொ­டர்ந்து மணிகண்­டன் நேற்று புழல் சிறைக்கு மாற்­றப்­பட்­டார்.

திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தா­கக் கூறி தனது வாழ்க்­கை­யையே கேள்­விக்­குறி ஆக்­கி­விட்­ட­தாக சென்னை பெசன்ட் நக­ரில் வசித்து வரும் 'நாடோ­டி­கள்' பட நடிகை சாந்­தினி அளித்த புகா­ரின்­பே­ரில் கடந்த 20ஆம் தேதி முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டனை பெங்­க­ளூ­ரு­வில் வைத்து போலி­சார் கைது செய்­த­னர். இதன்­பின்­னர் அவரை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.