கடம்பூர் ராஜூ: சசிகலா பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது

கடம்பூர் ராஜூ: சசிகலா பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது

1 mins read
64139b2d-6c9a-4ed0-8328-983ae9875ea9
-

கோவில்பட்டி: கட்­சி­யில் சேர்த்­துக்­ கொள்ள முடியாது என உறுதிபட தெரிவித்த பிறகும், "நான் அந்­தக் கட்­சிக்குச் செல்­வேன்,‌ நான் சென்றால்தான் அதிமுகவின் நிலைமை மேம்படும் என சசிகலா தொடர்ந்து சொல்­லி வருவது விளை­யாட்­டுத்­த­ன­மா­க­வும் வேடிக்­கை­யாகவும் உள்­ளது," என முன்­னாள் அமைச்­சர் கடம்­பூர் ராஜூ தெரி­வித்­துள்­ளார்.

அதி­முக பெயரை தவ­றாகப் பயன்­ப­டுத்­துபவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­வும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

கோவில்­பட்­டி­யில் 'நியூஸ் 18' தொலைக்­காட்­சிக்கு கடம்­பூர் ராஜூ அளித்த பேட்­டி­யில், "சசி­கலா ஒரு புதிய கட்­சியுடன் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தால் அதை யாரும் தடுக்க முடி­யாது. அதி­முக என்ற போர்­வை­யில் வரக்­கூ­டாது என்­பதுதான் எங்­கள் கருத்து.

"அதிமுகவில் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று தீர்மானம் நிறை வேற்றிய பின்னரும்கூட அவர் அதிமுகவுடன் இணைய முயற்சி எடுப்­பது அழ­கல்ல. எந்த அர்த்­தத்­தில் இப்படி செய்கிறார், அவ­ருக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் உள்ளது எனத் தெரியவில்லை.

"அதி­மு­க­வில் பொறுப்­பில் உள்­ள­வர்­கள், தொண்­டர்­க­ளி­டம் சசி­கலா பேசு­வ­தில்லை. அதி­மு­க­வில் இருந்து ஒதுங்கி இருப்­ப­வர்­களி­டம் பேசி வரு­கி­றார். விளாத்தி­கு­ளத்­தில் நடை­பெற்­ற­தாகக் கூறப்­படும் கூட்­டத்­தில் அதி­முக நிர்­வா­கி­கள் யாரும் பங்கேற்கவில்லை," என்றார் கடம்­பூர் ராஜூ.