திண்டுக்கல்: திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவி களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ள தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியாகும். அந்த அறிவிப்பை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிடு வார்," என்று தெரிவித்தார்.
இல்லத்தரசிக்கு விரைவில் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்
1 mins read
-

