சென்னை: ஸ்ேடட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) பணம் நிரப்பும் ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு கோடி பணத்தைக் கொள்ளையடித்தது எப்படி என கொள்ளையன் அமீர் அர்ஷ் 2 மணி நேரம் நடித்துக் காட்டினான்.
எந்த ஏடிஎம் அட்டையைக் கொடுத்தாலும் 19 விநாடிக்குள் நேரடி விளக்கக் காட்சியாக பணத்தை எடுத்துக்காட்டி போலிசாரை அசரவைத்தான்.
இந்தக் காட்சிகளை காணொளி யாகவும் போலிசார் பதிவு செய்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, ஏற்கெனவே அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிைறயில் அடைக்கப்பட்டனர்.
அமீர் அர்ஷை ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து போலிசார் விசாரித்து வருகின்றனர். அமீர் அர்ஷ், தான் உள்பட ஒன்பது பேர் தமிழகம் முழுவதும் 21 இடங்க ளில் கொள்ளையில் ஈடுபட்டதாக போலிசாரிடம் கூறியுள்ளான்.
இக்கொள்ளையில் தொடர்புடைய மூன்றாவது இளையரான நசீர் உசேன், 22, என்பவரையும் போலிசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தக் கொள்ளையில் மூளையாகச் செயல்பட்டு தலைமறைவாக உள்ள சதகத்வுல்லாகான் உள்பட ஆறு பேரை ஹரியானாவில் முகாமிட்டு தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர்.

