ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் தமிழ் மகளுக்கு குவியும் பாராட்டு

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் தமிழ் மகளுக்கு குவியும் பாராட்டு

2 mins read
dd22be01-d87c-4ba6-9cab-8e754c09fb40
நான் கலந்து கொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டி இது. இப்போட்டியில் எனது வாள் வீச்சுத் திறனை முழுமையாக வெளிப்படுத்தி கட்டாயம் நாட்டை பெருமை அடையச் செய்வேன் என்று தெரிவித்துள்ள பவானி தேவி. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: ஜப்­பான் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் அடுத்த மாதம் நடை­பெற உள்­ள ஒலிம்­பிக் போட்டி யில், இந்­தி­யா­வைப் பிர­தி­நிதித்து தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி என்ற தமிழ்ப் பெண் போட்­டி­யிட உள்­ளார்.

வாள்­வீச்சு போட்­டி­க்கு தேர்­வாகி­யுள்ள ‍பவானி தேவிக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின், மத்­திய அமைச்­சர்­கள் உள்ளிட்டோர் வாழ்த்துகள் கூறியுள்ள நிலை­யில், இரு தினங்­களுக்கு முன் பிர­த­மர் மோடியும் 'மன் கி பாத்' நிகழ்ச்­சி வழி பவா னிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்­நி­லை­யில், பவானி ேதவி­யால் தமிழ்­நாடே பெருமை அடைவ தாகக் குறிப்­பிட்­டுள்ள ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­ஹித், "கடின உழைப்­பு­டன் இலக்கை அடைந்து மக்­க­ளுக்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழ­வேண்­டும்," என நேற்று வாழ்த்து தெரி­வித்­தார்.

ஒலிம்­பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி­வரை நடை­பெற உள்­ளது.

அண்­மை­யில், பவானி தேவியை ஊக்­கு­விக்­கும் வகை­யில் அவ­ரது தாயா­ரி­டம் ரூ.5 லட்­சம் காசோ­லையை முதல்­வர் வழங்­கி­னார்.

இந்­நி­லை­யில், "தமி­ழக வீரர் பவானி தேவி, கடும் போராட்­டங்க ளுக்கு இடையே ஒலிம்­பிக்­கிற்கு தகுதி பெற்ற முதல் போட்­டி­யா­ளர் என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளார். பவா­னி­யின் பயிற்­சிக்­காக அவ­ரின் தாயார் தனது நகை­களை அட மானம் வைத்து செல­வ­ழித்­துள்­ளார். பவானி தேவி அனை­வ­ருக்­கும் ஒரு முன்­னு­தா­ர­ணம்," என பிர­த­மர் மோடி பாராட்டி உள்­ளார்.

பிர­த­ம­ரின் பேச்சு ஊக்­கம் அளிப்­ப­தாகத் தெரி­வித்த பவானி தேவி, "எனது முழுத் திற­மை­யை­யும் வெளிப்­ப­டுத்தி கட்­டா­யம் நாட்டை பெருமை அடை­யச்­செய்­வேன்," என்று கூறியுள்­ளார்.