நிமிடத்தில் 88 தோப்புக்கரணம்

நிமிடத்தில் 88 தோப்புக்கரணம்

1 mins read
6887616b-57f6-4074-9aed-5d0a39f2fda8
-

கொடைக்கானல்: கொடைக்கானல் லாஸ்காட் பகுதியில் வசித்து வரும் பிரசன்னா, 17, (படம்) என்ற 'பிளஸ் 2' மாணவர் ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணங்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார்.

அஜய்சேட்டன் என்பவரது மக னான பிரசன்னா, ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு ஒரு நிமிடத்தில் 82 முறை தோப்புக்கரணம் போட்டு 'இந்தியன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இப்போது 'ஏசியன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ்' சாதனைக்காக ஒரு நிமிடத்தில் 88 முறை தோப்புக்கரணம் போட்டுள்ளாா். இந்த சாதனையைப் பாராட்டி அந்நிறுவனம் பதக்கம், சான்றிதழ் வழங்கியுள்ளது. ''நமது முன்னோா்கள் தோப்புக் கரணம் போட்டுள்ளனா். இதுவும் ஒரு யோகாதான். இதனால் உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் சீராகும். நினை வாற்றல் அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்,'' என்றார் பிரசன்னா.