தட்டுப்பாடு: தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

தட்டுப்பாடு: தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

1 mins read
4dab7b8c-fe52-4f13-8e75-d95e9a7d24e8
-

சென்னை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் மீண்­டும் தடுப்­பூசி தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்து. இதன் கார­ண­மாக, தடுப்­பூசி போடும் பணி சென்னை, கோவை உள்­ளிட்ட பல்­வேறு மாந­க­ராட்­சி­க­ளி­லும் நேற்று நிறுத்­தப்­பட்­டன.

இதே­போன்று, ஈரோடு, கரூர், திருச்சி, நாமக்­கல், சேலம் மாவட்­டத்திலும் தடுப்­பூசி முகாம்­கள் நடை­பெ­றாது என அந்­தந்த மாவட்ட நிர்­வா­கங்­கள் அறி­வித்­தி­ருந்­தன.

போதிய அளவு தடுப்­பூசி வந்த­பின்­னர், தடுப்­பூசி போடு­வது குறித்து அறி­விக்­கப்­படும் என சென்னை மாந­க­ராட்சி இணை­யத்­த­ளத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நக­ரங்­களில் மட்­டு­மின்றி கிரா­மங்­கள், மலைப்­ப­குதி கிரா­மங்­களில் வசிக்­கும் மக்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஆர்­வ­மாக இருந்­தா­லும் பற்­றாக்­குறை நிலவி வரு­வது வருத்­த­ம­ளிப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பிர­ம­ணி­யம்.

இதற்­கி­டையே, இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லர் முத்­த­ர­சன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "கொரோனா சூழ­லில் தடுப்­பூசி போட்­டுக்கொள்­வது மட்­டுமே மக்­கள் உயிர்­காக்­கும் ஒரே வழி­யாக உள்­ளது. மாநி­லத்­திற்குத் தேவை­யான தடுப்­பூசி மருந்­து­களை வழங்­கு­வ­தில் மத்­திய பாஜக அரசு தொடக்­கத்­தில் இருந்தே பார­பட்­சம் காட்டி வரு­கிறது. தடுப்­பூசி மருந்தை உரிய காலத்­தில் வழங்­கா­த­தால் தடுப்­பூசி போடும் பணி தடை­பட்­டுள்­ளது. மத்­திய அரசு தமி­ழக மக்­க­ளின் உயி­ரோடு விளை­யா­டு­வது கண்­டிக்­க­தக்­கது," என்று கூறி­யுள்­ளார்.