கொவிட்-19 மூன்றாம் அலையைத் தடுக்க முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கீடு

கொவிட்-19 மூன்றாம் அலையைத் தடுக்க முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கீடு

1 mins read
22200df3-8afc-4ffa-95f3-ab28aa861936
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட்-19 மூன்­றாம் அலையை எதிர்­கொள்­வதற்குத் தேவை­யான முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்கைகளை எடுப்ப­தற்கு ரூ.100 கோடியை ஒதுக்­கீடு செய்து முதல்­வர் மு.க. ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இது­கு­றித்து தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள அறிக்கையில், "கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கைக்கு உத­வும் பொருட்டு, பல­த­ரப்­பட்ட மக்­களும் இது­வரை ரூ.353 கோடியை முதல்­வர் பொது நிவா­ரண நிதிக்கு நன்­கொடை யாக அளித்துள்ளனர்.

"இந்த நிதி­யில் இருந்து ரூ. 100 கோடிக்கு கொரோனா சிகிச்­சைக்­குத் தேவைப்­படும் திரவ மருத்­துவ உயிர்­வா­யுவை வாங்­க­வும் மூன்­றாம் அலை தொடர்­பான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளவும் முதல்­வர் ஒதுக்­கீடு செய்­துள்­ளார்," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, "மது­ரை­யில் மூன்றாம் அலையை எதிர்­கொள்ள முன்­மா­திரி திட்­டம் ஒன்றை உரு­வாக்க உள்­ளோம். தடுப்­பூசி குறை­வாக செலுத்­தப்­பட்ட பகு­தி­கள், முதி­யோர், இளை­ஞர்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­தி­களில் மூன்­றாம் அலை பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ள தால் இதுகுறித்து ஆய்வு செய்து வரு­கிறோம்," என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.