'தமிழக மக்களின் நலன் கருதி சிறையில் மாதக்கணக்கில் விரதம் இருந்துள்ளேன்' சசிகலா மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு

'தமிழக மக்களின் நலன் கருதி சிறையில் மாதக்கணக்கில் விரதம் இருந்துள்ளேன்' சசிகலா மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு

2 mins read
3d3983a6-0d30-4a3c-9a9a-3f5f0eade497
சசிகலா. படம்: ஊடகம் -

விழுப்­பு­ரம்: அதி­மு­க­வின் முன்­னாள் சட்­டத்­துறை அமைச்­சர் சி.வி. சண்­மு­கம் அளித்­தி­ருந்த புகா­ரைத் தொடர்ந்து, சசி­கலா மீது நான்கு பிரி­வு­க­ளின் கீழ் போலி­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

திண்­டி­வ­னம் காவல்நிலையத்­தில், அண்­மை­யில் சசி­கலா மீதும் அவ­ரின் ஆத­ர­வா­ளர்­கள் 500 பேர் மீதும் சி.வி. சண்­மு­கம் புகார் கொடுத்­தி­ருந்­தார்.

சசி­க­லா­வின் தூண்­டு­த­லின் பேரில் தனக்­கும் தனது குடும்­பத்­தி­ன­ருக்­கும் 500க்கும் மேற்­பட்ட தொலை­பேசி எண்­களில் இருந்து ஆபா­ச­மான வசை­க­ளோடு மிரட்­டல்­ வரு­வ­தா­க புகாரில் கூறியி­ருந்­தார்.

கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி விழுப்­பு­ரத்­தில் உள்ள அதி­முக கட்சி அலு­வ­ல­கத்­தில் ஊட­கங்­க­ளி­டம் பேசிய முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­மு­கம், "கரு­வாடு மீன் ஆக­லாம். ஆனால், சசி­கலா ஒரு­போ­தும் அதி­மு­க­வின் உறுப்­பி­னர் ஆகமுடி­யாது," எனப் பேசியிருந்தார்.

அத­னைத்தொடர்ந்து 9ஆம் தேதி விழுப்­பு­ரம் மாவட்­டம், ரோசனை காவல்­நி­லை­யத்­தில் சி.வி.சண்­மு­கம் புகார் அளித்­தார்.

அதில், "நான் சசி­கலா குறித்து ஊட­கங்­களில் கருத்­துத் தெரி­வித்த நிலை­யில், சசி­க­லா­வின் அடி­யாட்­கள் கைபேசி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்­டர் ஆகிய­வற்­றின் மூலம் ஆபா­ச­மா­க­வும் அநா­க­ரி­க­மா­க­வும் பேசி­யும் பதி­விட்­டும் வரு­கின்­ற­னர்.

"சசி­க­லா­வின் தூண்­டு­த­லின் பேரில்தான் ஏராளமானோர் எங்­கள் குடும்­பத்­திற்கு மிரட்டல் விடுத்து வரு­கின்­ற­னர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதையடுத்து, ரோசனை காவல்­து­றை­யி­னர் சசி­கலா உள்­பட அடை­யா­ளம் தெரி­யாத 500 பேர் மீது 501(1), 507, 109, 67 IT ஆகிய நான்கு பிரி­வு­க­ளில் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

தமி­ழக சட்­டமன்றத் தேர்­த­லுக்கு முன்பு அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கி­யி­ருக்கப் போவதாக அறி­வித்த சசி­கலா, தற்­போது தமது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் தொலை­பேசி­யில் தினமும் பேசி வரு­கி­றார்.

உடல் பெங்களூரில், உயிர் தமிழகத்தில்

தினந்தோறும் தொண்டர்களிடம் தொலைபேசி வழி பேசி வரும் வி.கே.சசிகலா, தேனியைச் சேர்ந்த கர்ணன் என்பவரிடமும் பேசியுள்ளார். "நான் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் என் உடல்தான் அங்கு இருந்ததே தவிர என் உயிர் தமிழக மக்களைச் சுற்றியே இருந்தது. தமிழக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நான் சிறையில் செய்யாத பூசையில்லை. மாதக்கணக்கில் விரதமும் இருந்தேன்," என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "கட்சி இப்படி பாழ்பட்டுக் கிடப்பதை இனியும் என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. சொன்னபடி அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தான் நான் ஒதுங்கியிருந்தேன். வெற்றிபெற்றிருந்தால் பெரும் நிம்மதியோடு நானும் இருந்திருப்பேன். அதை செய்யலையே?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் சசிகலா.