அருங்காட்சியகங்கள் திறப்பு: முகக்கவசம் கட்டாயம்

அருங்காட்சியகங்கள் திறப்பு: முகக்கவசம் கட்டாயம்

1 mins read
7bf07975-43e3-4e07-9a9c-e63628f409cb
சென்னையில் உள்ள அரசு அருங்காட்சி யகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பாம்பின் எலும்புக்கூட்டை உற்று நோக்குகிறான் சிறுவன். படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா நோய்த்­தொற்று குறைந்­துள்ள 27 மாவட்­டங்­களில் அருங்­காட்­சி­யகங்­கள் மீண்டும் திறக்­கப்­பட்டு உள்­ளன. தின­மும் காலை 9.30 மு­தல் மாலை 5 மணி வரை அருங்­காட்­சி­ய­கங்­களை மக்­கள் பாா்வையி­ட­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாா்வையா­ளா்­கள் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும். சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்ற வேண்­டு­ம் எனவும் அருங்­காட்­சி­யக அதி­கா­ரி­கள் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

கடந்த ஏப்­ரல் மாதம் 20ஆம் தேதி­மு­தல் மூடப்­பட்­டி­ருந்த அருங்­காட்­சி­ய­கங்­கள் ஏறத்தாழ 68 நாள்க ­ளுக்­குப் பிறகு பொது மக்களுக்குத் திறந்துவிடப்பட்­ட­தால் பார்­வை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.