கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்

கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்

1 mins read
d814238b-a90a-430c-bf8b-10f83cd70f06
-

திருச்சி: திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் மீது அதே துறையில் பயிலும் மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். தமிழ்த்துறை மாணவிகள் ஐந்து பக்கத்திற்குப் புகார் மனுவை எழுதி கல்லூரி முதல்வருக்கு அனுப்பி உள்ளனர். புகாரில், தமிழ்த்துறைத் தலைவரான பேராசிரியர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் தங்களுடன் மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்கிறார் என்றும் வகுப்பு நேரத்தில் கால்களால் தங்களைச் சுரண்டுவதாகவும் பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.