ஏறுமுகத்தில் ெசன்ற கிருமி பாதிப்பு அதிரடியாக இறங்குமுகம் கண்டது
சென்னை: மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் ஏறக்குறைய 36,000 பேரை ஏறுமுகத்தில் தொற்றிய கொவிட்-19 கிருமி பாதிப்பு, இப்போது 5,000க்கும் கீழாகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,512 பேர் கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. சிகிச்சை பலனளிக்காமல் 118 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 32,506 பேர் உயிரிழந்து உள்ளனர். 6,013 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 39 நாள்களாகவும் சென்னையில் 48 நாள்களாகவும் கொவிட்-19 பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அறிக்கையில் கூறியுள்ளது.
கறுப்புக் கொடியுடன் காவிரியாற்றில் இறங்கி விவசாயிகள்ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை: கர்நாடக மாநில முதல்வா் எடியூரப்பா, காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்குத் தேவையான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருவதை அறிந்து தமிழக விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனர். இதையடுத்து, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை, மாப்படுகை கிட்டப்பா பாலம் அருகேயுள்ள காவிரி ஆற்றில் இறங்கிய விவசாயிகள் கறுப்புக் கொடியேந்தி, கா்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனா். படம்: ஊடகம்
தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்
சென்னை: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபி திரிபாதி நேற்று புதன்கிழமையுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி புதிய டிஜிபி சைலேந்திர பாபு பொறுப்பேற்க உள்ளார். காவல்துறையில் இவரது பணியைப் பாராட்டி, அதிபர் விருது, பிரதமர் விருது, தமிழ்நாடு முதல்வர் விருது மற்றும் பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
மருத்துவர்: மணிகண்டன் வற்புறுத்தியதால்தான் கருக்கலைப்பு
அடையாறு: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவர், அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், "அமைச்சர்தான் சாந்தினியை என்னிடம் அழைத்து வந்தார். அவர் கட்டாயப்படுத்தியதால்தான் நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்தேன். அத்துடன், நடிகையின் முகத்தில் இருந்த காயத்துக்கும் சிகிச்சை அளித்தேன்," என்று கூறினார். இந்த முக்கிய வாக்குமூலம் காரணமாக மணிகண்டன் விடுதலையாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் சாந்தினியை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தங்கியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
ஒரே படிப்பு, ஒரே வேலை, ஒரே சம்பளம் பெறும் இரட்டையர்கள்
சென்னை: எஸ்ஆா்எம் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்வியைப் பயின்ற இரட்டை சகோதரர்களான மாணவா்களை ஜப்பான் கூகல் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பளத்தில் பணிபுரிய நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து துணைவேந்தா் வி.எஸ்.ராவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், "மாணவா்கள் சாப்டாா்ஷி, ராஜஸ்ரீ மஜூம்தாா் (படம்) இருவரும் ஒருவரை ஒருவா் மிஞ்சும் திறனுடன் பொறியியல் படிப்பில் சிறந்து விளங்கினாா்கள். பள்ளி முதல் பொறியியல் படிப்பு வரை ஒன்றாகப் படித்த இருவரும் ஒரே நிறுவனத்தில், ஒரே சம்பளத்தில் வேலைக்குத் தேர்வாகி உள்ளது பெருமைப்படும் விஷயம்," என்றார்.

