சிலம்பம் சுழற்றி அசத்திய மணப்பெண்

2 mins read
ebde7460-460c-4455-99d4-c07ae53d5922
திருமணமான அடுத்த நிமிடமே கம்புகளைச் சுழற்றி அசத்திய நிஷா. படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா காணொளிப் படம் -

தூத்­துக்­குடி: சென்ற திங்­கட்­கி­ழமை காலை மாப்­பிள்­ளை­யின் கையைப் பிடித்த 22 வயது மணப்­பெண் பி. நிஷா அடுத்த சில நிமி­டங்­களில் பட்டுச் சேலை­யு­டன் கம்­பு­களை நாலா­பக்­க­மும் சுழன்று சுழற்றி திருமண­மத்­திற்கு வந்­தி­ருந்த விருந்­தி­னர்­களை அசத்தி ஆச்­ச­ரி­யத்­தில் மூழ்­க­டித்­தார்.

தூத்­துக்­கு­டி­யில் உள்ள திருக்­கோ­லூர் கிரா­மத்­தில் மணப்­பெண்­ணின் தற்­காப்­புக் கலை அரங்­கே­றி­யதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்தது.

இதை, மாப்­பிள்­ளையை அச்­சு­றுத்த வேண்­டும் என்­ப­தற்­காக செய்­ய­வில்லை. பெண்­க­ளுக்கு தற்­காப்­புக் கலை­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அவ்­வாறு செய்­த­தாக பி. நிஷா கூறு­கி­றார்.

அவரை மணந்­து­கொண்ட 29 வயது ராஜ்­கு­மார் மோசஸ், நிஷா­வின் தாயா­ரு­டைய சகோ­த­ரர். தேமாங்­கு­ளம் எனும் பக்­கத்து கிரா­மத்­தில் வசித்து வரு­கி­றார்.

நிஷா பாரம்­ப­ரிய கலை­க­ளான சுருள் வாள் வீச்சு, சிலம்­பம் ஆகிய வற்றை சுழற்­றிக் காட்­டும் காணொளி சமூக ஊடகங்­களில் பரவி வருகிறது.

"சேலை அணிந்து சிலம்­பம் ஆடு­வது எளி­தான காரி­ய­மல்ல. ஆனால் எனது கண­வ­ரும் எனக்­குப் பயிற்­சி­ய­ளித்த மாரி­யப்­ப­னும் சிலம்­பத்­தில் மட்­டும் கவ­னம் செலுத்தி ஆடும்­படி கூறி­யி­ருந்­த­னர்," என்­றார் அவர்.

"சிறு வய­தி­லேயே சிலம்­பம் கற்க வேண்­டும் என்­ப­தில் ஆர்­வம் இருந்­தது. எனது தாயார் மணி­யும் பெண்­கள் பாது­காப்­புக்கு தற்­காப்புக் கலை­கள் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று ஊக்­க­ம­ளித்­தார்.

"அத­னால் நான் சிலம்­பம், ஒயி­லாட்­டம், சுருள்­வாள், களரி ஆகிய கலை­களைக் கற்­றுள்­ளேன். மாஸ்­டர் மாரி­யப்­ப­னி­டம் பயிற்சி பெற்­றேன். இந்­தப் பாரம்­ப­ரிய கலைப்­போட்­டி­களில் நான் பல்­வேறு பரி­சு­களும் பெற்று உள்­ளேன். திரு­மண விழா­வில் நான் கற்ற மதிப்­பு­மிக்க கலை­களை ஆடி­யது மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது," என்­றார்.

கடந்த ஆண்டு மாவட்ட அள­வில் நடை­பெற்ற சிலம்­பம் போட்­டி­யில் முதல் பரி­சை­யும் திருப்­பூ­ரில் மாநில அள­வில் நடந்த போட்­டி­யில் 3வது பரி­சை­யும் அவர் வென்­றுள்­ளார்.

அவரது நண்பர்களும் சக மாணவர்களும் பல்வேறு தற்காப்புக் கலையைக் காட்டி விருந்தினர்களை சுமார் ஒரு மணி நேரம் மகிழ்ச்சி அடைய வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் நடுக்கட்டுன்டான்காடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மகள் நிஷா, பி.காம். பட்டதாரி யாவார். போலிஸ் ஆக வேண்டும் என்ற கனவும் அவருக்குள்ளது.

இதற்கிடையே மணப் பெண்ணுக்கு தற்காப்புக் கலைகள் தெரிந்திருப்பதால் மாப்பிள்ளை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சில ஊடகப் பதிவாளர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

ஆனால் அதுபற்றியெல்லாம் தனக்கு கவலையில்லை என்று திரு ராஜ்குமார் கூறியுள்ளார்.