சென்னை: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது மாளிகையில் பதவியேற்பு கடிதத்தை ஜெகந்நாதனிடம் வழங்கினார்.
புதிய துணைவேந்தர் ஜெகந்நாதன், 39 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு வேளாண் பல்கலை முதல்வராக, துறைத் தலைவராக பணியாற்றி உள்ளார்.
வெவ்வேறு இதழ்களில் 55 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச நிகழ்வுகளில் 14 ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். ஐந்து சர்வதேச ஆய்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். எட்டு ஆய்வுத் திட்டங்களை 7.64 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தியுள்ளார்.
ஆராய்ச்சி மாணவர்கள் 14 பேருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். 'வேளாண் வானிலை சேவை' தொடர்பாக மத்திய அரசின் விருது பெற்றுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, இத்தாலி, இஸ்ரேல், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, டான்சானியா போன்ற நாடுகளுக்கு, கல்வி மற்றும் ஆய்வு தொடர்பாக அவர் பயணித்துள்ளார்.

