'சின்னம்மா' சுவரொட்டிகளால் தொண்டர்கள் அதிர்ச்சி

1 mins read
ce15896a-25ae-4ed3-8ba8-af11ce52d536
அம்மாவின் உருவம் சசிகலா என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் அதிமுக தொண்டர்களிடம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.படம்: தமிழக ஊடகம் -

மதுரை: அதி­மு­கவை வழி­ந­டத்த சசி­க­லாவுக்கு வேண்­டு­கோள் விடுக்கும் வகை­யில் அதி­முக தொண்­டர்களு­டன் சசி­கலா தொலை­பே­சி­யில் பேசும் ஒலிப்­ப­தி­வு­கள் அடுத்­த­டுத்து வெளி­யாகி வரு­கின்­றன.

அண்­மை­யில் இது குறித்து பேசிய அ.தி.மு.க. இணை ஒருங்­கி­ணைப்பாளர் எடப்­பாடி பழ­னி­சாமி, அ.தி.மு.க.வில் ஒன்­றரை கோடி தொண்­டர்­கள் உள்­ள­னர். ஆனால் யார்? யாரி­டமோ? போன் போட்டு பேசி அதை சசி­கலா காட்­சிப்­ப­டுத்தி வரு­கி­றார் என்­றார்.

"சசி­கலா, அதி­மு­க­வில் உறுப்­பி­னர் கூட கிடை­யாது. அத­னால் 10 பேர் என்ன? ஆயி­ரம் பேரி­டம் அவர் பேசி­னா­லும் கவலை இல்லை," என்­றும் பழ­னி­சாமி தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில் நேற்று அ.தி.மு.க. புற­ந­கர் கிழக்கு மாவட்ட மக­ளிர் அணி துணைச் செய­லா­ளர் சுஜாதா (எ) ஹர்­ஷினி சார்­பில் 'ஒற்றை தலைமை வழி ­நடத்த, ஒன்­றரை கோடி தொண்­டர்­க­ளின் துயர் தீர்க்க கட்­சியை துரோகிகளி­டம் இருந்து காப்­பாற்ற வரும் அம்­மா­வின் மறு உரு­வமே சின்­னம்மா' என்ற வாச­கத்­து­டன் மதுரை திருப்­ப­ரங்­குன்­றம், அவனியாபு­ரம், வில்­லா­பு­ரம், அண்­ணா­ந­கர், செல்­லூர் மற்­றும் மாவட்­டம் முழுவதி­லும் சுவ­ரொட்­டி­கள் ஒட்­டி­யுள்­ளார்.

மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் அ.தி.மு.க. மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டியுள்ள சுவரொட்டி களால் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.