தடுப்பூசி அச்சம்: மரத்தில் ஏறிய பழங்குடியின மக்கள்

கோவை: தடுப்­பூசி போட­வந்த அதி­கா­ரி­க­ளைக் கண்ட பழங்­கு­டி­யின மக்­கள், ஊசி போட்­டுக்­கொள்ள மறுத்து மரங்­களில் ஏறி பதுங்­கி­னர்.

கோவை­யில் பழங்­கு­டி­யின மக்­கள் அதி­கம் வசிக்­கும் கிரா­மங்­க­ளுக்கு சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் நேரில் சென்று தடுப்­பூசி போடும் பணியை மேற்­கொண்­டுள்­ள­னர்.

ஆனால் பழங்­கு­டி­யின மக்­களோ ஊசி போட்­டுக்­கொள்ள மறுத்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம், தொண்­டா­முத்­தூர் அருகே உள்ள முள்­ளாங்­காடு, கல்­கொத்­தி­பதி, சர்க்­கார் பூரத்­தி­பதி, வெள்­ளை­பதி உள்­ளிட்ட மலை­கி­ரா­மங்­க­ளுக்கு மருத்­துவ குழு­வி­னர் தடுப்­பூசி போடச் சென்­ற­னர்.

அப்­போது அங்­குள்ள பழங்­கு­டி­யின மக்­கள் அவர்­க­ளைக் கண்­ட­தும் ஓட்­டம்­பி­டித்­த­னர்.

சிலர் தடுப்­பூசி அச்­சம் கார­ண­மாக அங்­குள்ள மரங்­களில் ஏறிக் கொண்டு, அதி­கா­ரி­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்­திய சுகா­தார அதி­கா­ரி­கள் ­கொ­ரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்து விளக்­கம் அளித்­த­னர்.

அதன் பின்­னர் 600 பேர் வசிக்­கும் கிரா­மத்­தில் சுமார் பத்து விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­னர்.

விரை­வில் மற்­ற­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­வ­ரு­வார்­கள் என எதிர்பார்ப்பதாக சுகாதாரத்துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!