சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அதிகரிப்பு

சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அதிகரிப்பு

1 mins read
7f19c760-2e33-47db-b1c6-0383d6e20f4c
-

சென்னை: கடந்த நான்கு மாதங்­களுக்­குப் பிறகு சென்னை உள்­நாட்டு விமான நிலை­யத்­துக்கு வருகை தரும், புறப்­பட்­டுச் செல்­லும் விமா­னங்­க­ளின் எண்­ணிக்கை 120ஐ தாண்­டி­யுள்­ளது. அேதபோல், பய­ணி­களின் எண்­ணிக்­கை­யும் 12,000க்கும் மேல் அதி­க­ரித்­துள்­ளது. அதி­லும், சென்­னை­யில் இருந்து செல்­லும் பய­ணி­க­ளை­விட சென்­னைக்கு வரும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமி­ழ­கத்­தில் கிருமித்தொற்று குறையத் தொடங்­கி­ய­தை அ­டுத்து, சென்னை விமான நிலை­யத்­தில் கடந்த ஜூன் மாதத்­தில் இருந்து பய­ணி­கள் எண்­ணிக்­கை­யும் விமா­னங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளன. கடந்த 1, 2, 3ஆம் தேதி­களில் மட்டும் சராசரியாக 120 விமானங்கள் சேவை வழங்கி வருகின்றன.